
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு டேவிட் மில்லர் 101 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்க தவறியதால் 212 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததோடு போட்டியையும் பரபரப்பாக்கி விட்டனர். இலகுவாக வெற்றி பெற வேண்டிய எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை கண் முன் காட்டும் அளவிற்கு தென் ஆப்ரிக்கா வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும், இலக்கு மிக குறைவானது என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுமையாக விளையாடி 47.2 ஓவரில் இஅக்கை எட்டினர். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 8ஆவது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “இந்த போட்டியில் டக் அவுட்டில் அமர்ந்திருப்பதை விட மைதானத்தில் நின்றது சற்று எளிதாக இருந்ததாக நினைக்கிறேன். ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் சற்று கடினமாக இருந்தது. பின்னர் சிறப்பாக இலக்கை நோக்கி சென்றதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் முன்கூட்டியே ஓவர்களை வீசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.