
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பலராலும் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்து முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இதற்கு முக்கிய காரணமாக நட்சத்திர வீர்ர்கள் யாரும் சரிவர செயல்படாமல் இருந்ததே என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தனது ஓய்வு முடிவிலிருந்து அணிக்கு திரும்பிய பென் ஸ்டோக்ஸின் பங்களிப்பு இங்கிலாந்து அணியை படுத்தோல்விக்கு அழைத்துச்சென்றுள்ளது. ஏனெனில் காயம் காரணமாக முதல் ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், இதுவரை இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி வெறும் 48 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் நாளை ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் பென் ஸ்டோக்ஸ் முழங்கால் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.