
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஒவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆடிய 6 போட்டிகளில் 6யிலும் வென்று அசத்தியுள்ளது. அதேபோல் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனால் முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்கா அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணி 5வது தோல்வியை சந்தித்து 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன்படி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.