
காயத்தால் அவதிபடும் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் அதிர்ச்சி! (Image Source: Google)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இதுவரை 5 லீக் ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது. இப்போட்டி லக்னோவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.