முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் - ஜோஸ் பட்லர்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர அல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இரண்டாவது இடத்தைப் பெற்ற நியூசிலாந்து அணியும் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
முந்தைய உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இதே இங்கிலாந்திடம் மல்லுக்கட்டிய நியூசிலாந்து சூப்பர் ஓவர் முடிவிலும் சமனில் நீடித்ததால் அதிக பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் கோப்பையை கோட்டை விட்டது. அதற்கு பழிதீர்க்க இது சரியான சந்தர்ப்பமாக எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
அதேசமயம் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் நுழையும் இங்கிலாந்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டியுள்ளது. கேப்டன் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், டேவிட் மலான், லிவிங்ஸ்டோன் என்று இங்கிலாந்து அணியில் அதிரடி வீரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தால் அவதிப்படுவதால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறுகையில், “பென் ஸ்டோக்ஸ் இடுப்பு பகுதியில் லேசான காயத்தால் அவதிப்படுகிறார். அதில் இருந்து மீள்வதற்கு அவர் பிசியோவுடன் இணைந்து பணியாற்றுகிறார். என்றாலும் போட்டியின் தொடக்கத்தில் உடல் தகுதி விஷயத்தில் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கமாட்டோம். சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கிரிக்கெட் விளையாடுவதற்கு அருமையான ஒரு இடம் இந்தியா. இன்று உலகக் கோப்பைபோட்டி தொடங்குவதை நினைத்து உற்சாகத்தில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now