
இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி 284 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ரஹமதுல்லா குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் கில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆதில் ரஷித் 3 விக்கெட்களை சாய்த்தார். ஆனால் 285 ரன்கள் துரத்திய இங்கிலாந்து ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தானின் தரமான சுழல் பந்து வீச்சில் 40.3 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சிறிய அணிகளிடம் தோல்வியடைவது முதல்முறையல்ல. ஏற்கனவே வங்கதேச அணியிடம் இரு முறையும், அயர்லாந்து அணியிடம் ஒரு முறையும் தோல்வியடைந்திருக்கின்றன. இந்த 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததற்கு ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் முக்கிய காரணமாக உள்ளார்.