
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பங்கேற்றனர். இப்போட்டிகளில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நான் இந்த மைதானத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். ஆனாலும் இந்த போட்டியில் ரிலாக்ஸாக என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க நினைத்தேன். ஏனெனில் இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.