
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியளது. இத்தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் உறுதியாக முன்னேறியுள்ள நிலையில், அடுத்த இரு இடங்களைப் பிடிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலைவிவருகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், லோக்கி ஃபர்குசன் மற்றும் மார்க் சேப்மேன் ஆகியோர் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அந்த வரிசையில் தற்போது மாட் ஹென்றி மற்றும் ஜேம்ஸ் நீஷம் இணைந்துள்ளனர்.
நியூசிலாந்து அணிக்காக மாட் ஹென்றி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் நியூசிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.