ஐபிஎல்லில் வேலை செய்ய தாம் சம்மதிக்கவில்லை - சந்திரகாந்த் பண்டிட்!
ஐபிஎல் 2012 சீசனுக்கு முன்பாக கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானை அவரது பங்களாவில் வைத்து சந்தித்துப் பேசியதாகவும் ஆனால் ஐபிஎல்லில் வேலை செய்ய தாம் சம்மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் சந்திரகாந்த் பண்டிட்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மத்தியப் பிரதேசம் அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அந்த அணி வென்ற போது பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் உணர்ச்சிப் பொங்க ஓடி வந்து தனது அணி வீரர்களை கட்டி அணைத்துக் கொண்டது ரசிகர்களின் நெஞ்சை தொட்டது.
காரணம் அதன் பின்னணியில் மிகப்பெரிய வைராக்கியமே உள்ளது என்றே கூறலாம். கடந்த 1999ஆம் ஆண்டு இதே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ரஞ்சி இறுதி ஆட்டத்தில் சந்திரகாந்த் பண்டிட் தலைமையிலான மத்தியபிரதேச அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.
Trending
வேதனையில் கண்ணீர் விட்ட சந்திரகாந்த் பண்டிட் இப்போது 23 ஆண்டுகள் கழித்து ஒரு பயிற்சியாளராக அதே இடத்தில் சாதித்து காட்டி இருக்கிறார்.
இந்நிலையில், ஐபிஎல் 2012 சீசனுக்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானை அவரது பங்களாவில் வைத்து சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் ஐபிஎல்லில் வேலை செய்ய தாம் சம்மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் சந்திரகாந்த் பண்டிட்.
இதுகுறித்து பேசிய அவர், ''வெளிநாட்டு பயிற்சியாளரின் கீழ் பணிபுரிய நான் விரும்பவில்லை. ஏதேனும் ஒரு ஐபிஎல் அணியில் இணைந்து பணி செய்திருக்க முடியும். ஆனால் நான் அதற்காக வரவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now