
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம், சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமிருக்கு இடத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்படி அந்த அணியின் கேப்டன் சுனில் நரைன் 6 ரன்களிலும், உன்முக்த் சந்த் 9 ரன்களிலும், ஜேசன் ராய் 27 ரன்களிலும் என டேவிட் மில்லர் 6 ரன்களிலும், நிதிஷ் குமார் 15 ரன்களிலும், சைஃப் பதர் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் ஓரளவு தக்குப்பிடித்து 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், கெஞ்சிகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியிலும் தொடக்க வீரர் ருபென் கிளிண்டன் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதப்பின் இணைந்த டெவால்ட் பிரீவிஸ் - நிக்கோலஸ் பூரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.