
ஐபிஎல்லில் வெற்றிகரமான வீரர்களில் முக்கியமானவர்கள் கீரன் பொல்லார்டு மற்றும் ட்வைன் பிராவோ. டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களான பொல்லார்டு - பிராவோ ஆகிய இருவருமே ஐபிஎல்லில் அவர்கள் ஆடும் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்காக இருவரும் 14 ஆண்டுகள் இணைந்து ஆடியிருக்கின்றனர். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களான பொல்லார்டு மற்றும் பிராவோ ஆகிய இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் நண்பர்களாக இருந்தாலும், கடும் போட்டியாளர்கள்.
ஐபிஎல்லில் பரம எதிரி அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளில் ஆடினர் பொல்லார்டும் பிராவோவும். அதனால் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே மோதும் போட்டிகளில் இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல்களும் மிகவும் சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.