Advertisement

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!

ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 14, 2024 • 16:04 PM
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்த வகையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் ’எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளிலும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending


அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை தோல்வியுடன் தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதல் 3 ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவினாலும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. 

மும்பை அணியின் பேட்டிங்கில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோரும், பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் மற்ற வீரர்களும் சோபிக்கும் பட்சத்தில் அந்த அணி நிச்சயம் வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது  இந்த சீசனில் இதுவரை வெளியூரில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த இழுக்கை போக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளனர்.  மேலும் மும்பை இந்தியன்ஸை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எப்போது சிஎஸ்கே அணிக்கு சவாலானது என்பதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் ஷிவம் துபே, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான் ஃபார்மில் உள்ளனர். அதேசமயம் ரச்சின் ரவீந்திரா, டெரில் மிச்சேல், அஜிங்கியா ரஹானே, தோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், துஷார் தேஷ் பாண்டே ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையில், இன்றைய போட்டியில் தீக்ஷனா நீக்கப்பட்டு பதிரனா இடம் பெற வாய்ப்புள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கே), அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஷர்துல் தாக்கூர்/தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மகேஷ் தீக்ஷனா/ மதீஷா பதிரனா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement