Advertisement

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 20, 2025 • 04:00 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 20, 2025 • 04:00 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Also Read

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளை​யாடி 3 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று புள்ளிப்பட்டியலின் 7அம் இடத்தில் உள்​ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா, திலக் வர்மா உள்ளிட்டோர் சோபிக்க தவறுவது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சைப் பொறுத்த மட்டும் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ஹர்திக் பாண்டியா, மிட்செல் சான்ட்னர் ஆகியோருடன் அஷ்வானி குமார், விக்னேஷ் புதூர் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு அழுத்தத்தை அதிகரிக்கின்றனர். அவர்களுடன் ஜஸ்பிரித் பும்ராவும் தனது வேலையை சரியாக செய்யும் பட்சத்தில் நிச்சயம் மும்பை இந்தியன்ஸின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவது கடினமாகும்.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), நமன் தீர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் இது​வரை 7 போட்​டிகளில் விளை​யாடி இரு வெற்​றி, 5 தோல்வி​களைச் சந்​தித்து மோச​மான நிலை​யில் உள்​ளது. இந்நிலையியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியைப் பதிவுசெய்திருந்தாலும், அணியின் மிடில் ஆர்டர் மீது பெரும் சர்ச்சைகளும், ஏமாற்றங்களும் அதிகரித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர் ஷேக் ரஷீதின் ஆட்டம் அணிக்கு கைகொடுத்துள்ளது.

மேற்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆயூஷ் மாத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்திருப்பதால் நிச்சயம் இன்றைய ஆட்டத்தில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பாச்ர்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சில் நூர் அஹ்மத், மதீஷா பதிரானா, கலீல் அஹ்மத், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் அன்ஷூல் கம்போஜின் வருகையானது பலமாக மாற்றியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத், டெவால்ட் பிரீவிஸ், ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, அன்ஷூல் கம்போஜ்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 38
  • மும்பை இந்தியன்ஸ் - 20
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 18

Also Read: Funding To Save Test Cricket

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷித் (துணைக்கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஹார்டிக் பாண்டியா (கேப்டன்), வில் ஜாக்ஸ்
  • பந்து வீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், கலீல் அகமது, நூர் அகமது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement