இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன் இவர்தான் - மைக்கேல் வாகன்
தோனி மற்றும் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டனாக தற்போது வரை பார்க்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியதை அடுத்து, அடுத்து வந்த டி20 உலகக் கோப்பைக்கு அனுபவமில்லாத இந்திய அணியை வழிநடத்தி கோப்பையைக் கைப்பற்றியது தோனி என்ற ஒரு தனிமனிதனின் சாமார்த்தியம் என்று தான் கூற வேண்டும்.
அதன்பின் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ஒருநாள் உலக கோப்பை கனவை 2011 ஆம் தனது சிக்சர் மூலம் நிறைவேற்றிக் காட்டினார். தொடர்ந்து 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என ஐசிசி நடத்திய அனைத்து வகையான கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்தார். அதுமட்டுமின்றி பல ஆண்டுகள் இந்திய அணிக்காக வெற்றிகரமாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி, இந்திய அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார் என்று கூறலாம்.
Trending
ஏனெனில் தோனியின் தலைமையில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் அணியில் அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். அதேபோல் தோனி விட்ட இடத்தை விராட் கோலி சரியாக கைப்பற்றி சிறப்பாக இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். ஐசிசி நடத்திய கோப்பைகளை விராட் கோலி தலைமையில் இந்திய அணி கைப்பற்றவில்லை என்பதைத் தவிர மற்றபடி இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தோனி மற்றும் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மைக்கேல் வாகன்,“தோனி மிகச் சிறந்த கேப்டன். இந்திய அணி இன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வர தோனி தான் முக்கிய காரணம். இளம் வீரர்களை கண்டெடுத்து இந்திய அணியை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்காற்றிய தோனி இன்று இந்திய அணி வலிமையாக இருக்க காரணமாக திகழ்கிறார். விராட் கோலியை சிறந்த டெஸ்ட் கேப்டன் எனக் கூறலாம் ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் அணியை அவர் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
அதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை எடுத்துக்கொண்டால் தோனியும், டெஸ்ட் போட்டிகள் என்று வந்தால் விராட் கோலி சிறந்த கேப்டன் என்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி தான் என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now