
இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். மேலும் ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலமாக இவர் இந்திய அணியில் தனது இடத்தைப் பிடித்தார். அதன்படி, ஆரம்ப காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால், அதன்பின் கடந்த 2014ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு வரை விளையாடி வந்தார்.
இதில் ஆர்சிபி அணிக்காக 114 போட்டிகளில் விளையாடிய சஹால், 139 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை இந்நாள் வரை வைத்துள்ளார். ஆனால் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணியானது யுஸ்வேந்திர சஹாலை தக்கவைக்காமல் அணியிலிருந்து விடுவித்தது.
இருப்பினும் ஏலத்தில் சஹாலை நிச்சயம் ஆர்சிபி அணி வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுஸ்வேந்திர சஹாலை ரூ.6.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. அச்சமயத்தில் இதுகுறித்து பேசிய சஹால், “எட்டு வருடங்களாக ஆர்சிபி அணியின் ஒரு பகுதியாக இருந்த நான், தற்போது ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. ஐபிஎல் ஏலத்திற்குப் பிறகு இந்த முடிவைப் பற்றி எனக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இது என்னை மிகவும் வருத்தப்படுத்தியது.