
டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன்சியில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பதிலாக டி20 கேப்டனாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு, 2024ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு அணியை கட்டமைக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் ஸ்பிலிட் கேப்டன்சி பற்றி முன்னாள் வீரர்கள் பேச தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பல்வேறு தொடர்களில் நிரூபித்துள்ளதோடு, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரையும் கைப்பற்றி உள்ளார். அதேபோல் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமும் கூடுதல் பொறுப்புடன் இருப்பதால், விரைவில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.