
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இத்தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் வெற்றி பெறுவது பற்றி மட்டும் உறுதியாக இருப்பதற்குப் பதிலாக, இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதில் எங்கள் அணி கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.