
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்தியாவின் இந்த காம்பினேஷன் சரிவருமா என பல்வேறு விவாதங்களை தொடங்கியுள்ளனர்.
ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது சரியான பவுலிங் படை இல்லாதது தான். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயத்தில் இருந்து குணமடைந்து வந்துள்ளனர். இவர்களுடன் புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் ஜோடி சேர்கின்றனர்.
இந்த பவுலிங் யூனிட்டில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் முகமது ஷமி இல்லாதது தான். ஆஸ்திரேலிய களத்தில் அதிக வேகமும், பவுன்ஸும் இருக்கும். இப்படிபட்ட களத்தில் முகமது ஷமி நன்றாக பந்துவீசுவார். ஆனால் அவர் பேக் அப் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவை 5வது வேகப்பந்துவீச்சாளராக வைத்துள்ளனர்.