Advertisement
Advertisement
Advertisement

இவர்களால் நாங்கள் தோற்கவில்லை - மிட்செல் மார்ஷ்!

அனுபவமற்ற இந்திய பேட்ஸ்மேன்களால் நாங்கள் சன் ரைசரஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோற்கவில்லை என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 30, 2023 • 13:14 PM
Mitchell Marsh defends Delhi Capitals' inexperienced Indian batters
Mitchell Marsh defends Delhi Capitals' inexperienced Indian batters (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மிட்செல் மார்ஷ் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். நேற்றையப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மார்ஷ் 27 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் பேட்டிங்கில் 39 பந்துகளில் அதிரடியாக 63 ரன்கள் குவித்தார். 

அதில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இருப்பினும், அவருக்குப் பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் சரியாக விளையாடததால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றையப் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட மிட்செல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Trending


போட்டி முடிவடைந்த பிறகு பேசிய மிட்செல் மார்ஷ், “எங்களது அனைத்து வீரர்களின் மேலும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எங்களது பேட்டிங் வரிசையில் சில அனுபவமற்ற வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீதும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களால் இந்தப் போட்டியில் நாங்கள் தோற்றதாக நான் நினைக்கவில்லை. ஆட்டத்தில் சில இடங்களில் நாங்கள் ஒரு அணியாக எங்களை சரி செய்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில்தான் நாங்கள் தோல்வியடைந்தோம். 

இந்த சீசன் முழுவதும் எடுத்துக் கொண்டால், நாங்கள் யாரையும் குறை கூற முடியாது. இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்தோம். ஐபிஎல் போட்டிகளில் வெல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதே போல இந்த ஆடுகளத்தில் 195 ரன்கள் என்பது அதிக ரன்கள் என நான் நினைக்கிறேன். அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் க்ளாசன் சிறப்பாக விளையாடினார்கள்” என்று தெரிவித்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement