
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: மிட்செல் ஓவன் மற்றும் ஆண்ட்ரிஸ் கஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமித் படேல் மற்றும் கேப்டன் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் சமித் படேல் 24 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சாய்தேஜா முக்காமல்லா 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதுல் அரைசதம் கடந்து அசத்திய டூ பிளெசிஸ் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 69 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் 32 ரன்களில் மார்கஸ் ஸ்டொய்னிஸ்னும், 31 ரன்களில் மிலிந்த் குமாரும் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் ரஞ்சனே 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் அணி தரப்பில் மிட்செல் ஓவன் 3 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகலையும் கைப்பற்றினர்.