
இந்தியா - நியூசிலாந்து அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க பின் ஆலன் 35, டிவோன் கான்வே 52 ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து டேரில் மிட்செலும் 59 அரை சதம் அடித்து ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார். கிளென் பிலிப்ஸும் தனது பங்கிற்கு 17 ரன்களை அடித்ததால், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை அடித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 47, வாஷிங்டன் சுந்தர் 50 (28), கேப்டன் ஹார்திக் பாண்டியா 21 ஆகியோர் மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தனர். அதேசமயம் டாப் ஆர்டர் பேட்டர்களான ஷுப்மன்ன் கில் 7, இஷான் கிஷன் 4, திரிபாதி போன்றவர்கள் சொதப்பினார்கள். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 155/9 ரன்களை மட்டும் சேர்த்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.