
Mitchell Santner Tests Positive From Covid-19 Ahead Of Ireland Tour (Image Source: Google)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியில் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், கான்வே, டிம் சவுத்தி, டிரண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 10ஆம் தேதி முதல் நடக்கும் டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக செயல்படுகிறார். ஒருநாள் அணிக்கு டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நியூசிலாந்து டி20 அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.