
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலமாக சரிலிருந்து மீண்டெழுந்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 77 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 60 ரன்களையும், ஆரோன் ஹார்டி 44 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் டக் அவுட்டானார். பென் டக்கெட் 8 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த் வில் ஜாக்ஸ், கேப்டன் ஹாரி புரூக் இணை அதிரடியாக விளையாடியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு156 ரன்கள் பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர். இதில் வில் ஜாக்ஸ் 84 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காம இருந்த ஹாரி புரூக் 110 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 33 ரன்களையும் சேர்த்தனர்.