
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய தூணாக விளங்கி வந்தவர் கேப்டன் மிதாலி ராஜ். இவர் இன்று அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய பெருமையும், சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையும் மிதாலி ராஜ்-யிடம் இருந்து வருகிறது. 39 வயதிலும் அதே உத்வேகத்துடன் ஆடி வந்த இவர், இன்று ஓய்வை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து உருக்கமான பதிவையும் போட்டுள்ளார்.
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், “உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிக உயர்ந்த கவுரவம் என்பதால், இந்தியா ப்ளூஸ் அணிவதற்கான பயணத்தில் ஒரு சிறுமியாக நான் புறப்பட்டேன். பயணம் உயர்வும் சில தாழ்வுகளும் நிறைந்தது . ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு தனித்துவமான ஒன்றைக் கற்றுக் கொடுத்தது மற்றும் கடந்த 23 வருடங்கள் என் வாழ்வில் மிகவும் நிறைவான, சவாலான மற்றும் மகிழ்ச்சியான வருடங்களாக இருந்தன.