
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பல்வேறு முக்கிய சாதனைகளை படைத்து அசத்தியவர் மிதாலி ராஜ். இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
சர்வதேச மகளிர் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற பெருமை மிதாலி ராஜ்-ஐ தான் சேரும். இதுவரை இந்தியாவுக்காக 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,805 ரன்களை குவித்துள்ளார். அவரின் சாராசரி மட்டும் 50.68 ரன்கள் ஆகும். இப்படிபட்ட ஜாம்பவான் இன்று ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “அனைத்து பயணங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும். அந்தவகையில் இன்று நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நாளாகும் எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு ஆதரவுக்கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகள். என் வாழ்க்கையின் 2வது இன்னிங்ஸை ஆட உங்களது ஆசிர்வாதம் வேண்டும்” எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.