
Mithali Raj Tops ICC Women's ODI Player Rankings (Image Source: Google)
ஐசிசி ஓவ்வொரு தொடர் முடிவுக்கு பிறகும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்திய வாராந்திர தரவரிசை பட்டியல் வெளியீட்டில், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி 3 ஆட்டங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு தரவரிசை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள மகளிருக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 762 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடத்தற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 16 ஆண்டுகளுக்கு பிறகு மிதாலி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் முதலிடத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் 30 புள்ளிகளை இழந்து 736 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.