
MLC 2023: Major Cricket League To Start From July 13! (Image Source: Google)
அமெரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் மூலம் நடத்தப்படும் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
இதில் , சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகங்கள், புதிய அணிகளை வாங்கியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கியுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், லாஞ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கியுள்ளது. இந்நிலையில் முதல் போட்டி டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் ஜூலை 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மூன்று வாரங்களுக்கு நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடர் ஜூலை 30ஆம் தேதி முடிவடைகிறது.