
அமெரிக்காவில் ஆறு அணிகளை வைத்து மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், வாஷிங்டன் பிரீடம் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டன் மோசஸ் ஹென்றிகுயூஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய வாஷிங்டன் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் மொத்தம் 50 பந்துகளை எதிர் கொண்டு பத்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் அபாரமாக விளையாடி 80 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து அந்த அணியில் யாரும் பெரிதான எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாட வந்த சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் கான்வே இருவரும் ஏமாற்றம் அளித்தார்கள். கடந்த ஆட்டத்தில் ஃபாஃப் முதல் பந்தில் ஆட்டம் இழந்து இருக்க, இந்த முறை கான்வே முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் முறையே 14, 0 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.