
Glenn Maxwell Century: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சதமடித்து அசத்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் கூட்டு முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 13 சிக்ஸர்களுடன் 106 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்க்ள் சோபிக்க தவறினர். இதில் சைஃப் பதர் 32 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.