
எம்எல்சி 2025: நிக்கோலஸ் பூரன், மொனாங்க் படேல் ஆகியோரது அரைசதத்தின் காரணமாக எம்ஐ கேப்டவுன் அணி நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் உன்முக்த் சந்த் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 11 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 15 ர்ன்னிலும் சைப் பதர் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ரோவ்மன் பாவெல், கேப்டன் ஜேசன் ஹோல்டர், மேத்யூ ட்ராம்ப் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தானர். பின் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 86 ரன்களைச் சேர்த்த நிலையில் ரூதர்ஃபோர்டும் விக்கெட்டை இழக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.