
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிகோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டூ பிளெசிஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய டெவான் கான்வே 23 ரன்களிலும், அடுத்து வந்த சாய்தேஜா முக்காமல்லா 38 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
ஆனாலும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 100 ரன்களைச் சேர்த்த கையோடு டூ பிளெசிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்களைக் குவித்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சேவியர் பார்ட்லெட், ஹாரிச் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.