
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் நந்த்ரே பர்கர், நூர் அஹ்மத், ஸியா உல் ஹக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்காஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் டூ பிளெசிஸ் 7, டெவான் கான்வே 13 ரன்களில் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சாய்தேஜா மற்றும் டேரில் மிட்செல் இணை ஓரள்வு தாக்குப்பிடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் 50 ரன்கள் பர்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களில் சாய்தேஜாவும், 25 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செலும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 4 சிக்ஸர்களுடன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிலிந்த் குமார் 18 ரன்களையும், ஷுபம் ரஞ்சனே 15 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்தது. ஆர்காஸ் அணி தரப்பில் ஜஸ்தீப் சிங் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.