
அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் - சான்பிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சான்பிரான்ஸிஸ்கோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மேத்யூ வேட் - ஃபின் ஆலன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபின் ஆலன் 20 ரன்களிலும், அடுத்து கலமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 39 ரன்களையும், ஷதாப் கான் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ வேட் அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 78 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கோரி ஆண்டர்சனும் 39 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது. நைட்ரைடர்ஸ் தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.