சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
![Moahmmed Shami Need Only 3 Wicket To Break Kapil Dev Record And Only 4 Wicket To Complete His 200 Od சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!](https://img.cricketnmore.com/uploads/2025/02/Moahmmed-Shami-Need-Only-3-Wicket-To-Break-Kapil-Dev-Record-And-Only-4-Wicket-To-Complete-His-200-ODI-Wicket1-mdl.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது பெயரில் சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Trending
கபில்தேவை முந்தும் வாய்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர் எனும் கபில் தேவ் சாதனையை முறியடிப்பார். கபில்தேவ் இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக 23 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் முகமது ஷமி 16 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் இந்த பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் 21 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்
இப்போட்டியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 200ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்வார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய எட்டாவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். இதற்கு முன் இந்திய அணி தரப்பில் அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், அஜித் அகர்கர், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், கபில் தேவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், வருண் சக்ரவர்த்தி, கேஎல் ராகுல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர்.
Win Big, Make Your Cricket Tales Now