
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற இருக்கும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மொயீன் அலி தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்து அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் ஒரே ஒரு கேகேஆர் வீரருக்கு மட்டுமே இடம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளார்.