Advertisement

முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த முகமது அமீர்; வைரலாகும் காணொளி!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் கனடா அணி வீரர் நவ்நீத் தலிவால் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை தகர்த்த முகமது அமீர்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 11, 2024 • 09:03 PM

பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைதார். இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இஃப்திகார் அஹ்மத் நீக்கப்பட்டு சைம் அயூப் சேர்க்கப்பட்டார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 11, 2024 • 09:03 PM

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரோன் ஜான்சன் முதலிரண்டு பந்திகளிலுமே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கி வைத்தார். அதேபோம் மற்றொரு தொடக்க வீரரான நவ்நீத் தலிவாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய நிலையில், 4 ரன்களோடு விக்கெட்டையும் இழந்தார். 

Trending

அதன்பின் ஆரோன் ஜான்சன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திவரும் நிலையில், மறுபக்கம் களமிறங்கிய பிரகத் சிங் 2 ரன்களிலும், நிக்கோலஸ் கிர்டன் ஒரு ரன்னிலும், ஸ்ரேயாஸ் மொவ்வா 2 ரன்களிலும், ரவிந்தர்பால் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதன் காரணமாக கனடா அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய நவ்நீத் தலிவால் அதே ஓவரின் கடைசி பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்படி முகமது அமீர் வீசிய லெந்த் பந்தை கணிக்க தவறிய தலிவால் க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement