
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணியானது இமாத் வசிம், ஃபேபியன் ஆலனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 176 ரன்களைச் செர்த்தது.
இதில் அதிகபட்சமாக இமாத் வசீம் 46 ரன்களையும், ஃபகர் ஸமான் 38 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.
அந்த அணியில் ஆண்டிரிஸ் கௌஸ் 39 ரன்களையும், பாரிஸ் 31 ரன்களையும், கேசி கார்டி 34 ரன்களையும் கேப்டன் கீரன் பொல்லார்ட் 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஃபேபியன் ஆலன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.