பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தொழில்நுட்பக் குழுவிலிருந்து முகமது ஹபீஸ் விலகல்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் இடம் பெற்று இருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு இப்பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன்கள் இன்சமாம்-உல்-ஹக், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரையும் கொண்ட இக்குழு அணியின் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறும்போது, “பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Trending
பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன். எப்போதும் போல் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் செயல் திறனை மதிப்பீடுவதற்காக நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய ஆலோசனை கூட்டத்தில் முகமது ஹபீசும் கலந்து கொண்டார். இதில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் பாபர் ஆசாம், துணை கேப்டன் ஷதாப் கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now