
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து இரண்டு ஆண்டுகள் தாண்டிய நிலையில் தற்போது தனது 71ஆவது சதத்திற்காக காத்திருக்கிறார். இப்போது அடிப்பார், அப்போது அடிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் கோலி தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலாவது கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து விராட் கோலி ஏமாற்றத்தை அளித்துள்ளார். முதல் போட்டியின்போது புல் ஷாட் அடிக்க நினைத்து ஆட்டமிழந்த அவர் தற்போது இரண்டாவது போட்டியில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்துள்ளார்.