
ஐசிசி நடத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது . இதற்கான அட்டவணை வெகு விரைவிலேயே வெளியிடப்படும் என தெரிகிறது . 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைவிலேயே ஒருநாள் உலகக் கோப்பை காண அட்டவணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது .
உலகக்கோப்பை 2023 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் அட்டவணை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் அதற்கான முன்மாதிரி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது . அந்த அட்டவணையின் படி உலகமே எதிர்நோக்கி கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது .
அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இந்த போட்டியின் மீது தான் இருக்கிறது . கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வீரர்கள் இப்போதே இந்த போட்டி பற்றிய கணிப்பை கணிக்க தொடங்கிவிட்டனர் . முன்னாள் வீரர்கள் பலரும் இந்த போட்டி தொடர்பாக தங்களது கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றனர் . இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் முகமது ரிஸ்வான் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் .