
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான கடைசி வாய்ப்பு என்பதால் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ள போதிலும், பவுலிங் தான் சற்று சொதப்பலாக உள்ளது. கரோனா காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியிருந்த முகமது ஷமி, இந்த தொடரில் இருந்தும் வெளியேறுவார் என தகவல் வெளியானது. இதனால் அவருக்கு மாற்று வீரராக உமேஷ் யாதவ் இருந்து வருகிறார்.
இந்நிலையில் முகமது ஷமி தனது உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது அவர் கரோனாவில் இருந்து பூரண குணமடைந்துவிட்டதாகவும், நெகட்டீவ் முடிவு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் இன்று நடைபெறும் முதல் டி20 போட்டிக்கு வந்துவிடுவாரா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.