Advertisement

ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் - அணியில் இடம்பிடிக்காதது குறித்து முகமது ஷமி!

எனது முயற்சிகளை மேற்கொண்டு, எனது பந்துவீச்சு உடற்தகுதியை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

Advertisement
ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் - அணியில் இடம்பிடிக்காதது குறித்து முகமது ஷமி!
ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் - அணியில் இடம்பிடிக்காதது குறித்து முகமது ஷமி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 27, 2024 • 05:35 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 27, 2024 • 05:35 PM

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ் காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Trending

மேலும் காயம் காரணமாக கடந்தாண்டு முதல் இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கும் முகமது ஷமி, பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். முன்னதாக, கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் மற்றும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார்.

பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது காயத்தில் இருந்து மீளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முகமது ஷமி, வங்கதேச டெஸ்ட் தொடரிலேயே கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்து. ஆனால் சில காரணங்களால் அவரால் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களிலும் அணிக்கு திரும்ப முடியாமல் போனது.  இடம்பிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தான் தற்சமயம் என்சிஏவில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த முகமது ஷமி மீண்டும் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தற்சமயம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரையும் முகமது ஷமி தவறவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement