
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் முதல் பகுதி தற்பொழுது நிறைவடைந்து இருக்கிறது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பந்துவீச்சை இந்தியா மேற்கொள்ளும் என அறிவித்தார். இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை.
இதன்படி இந்திய அணிக்கு முதல் ஓவரை வீசிய முகமது சமி மிட்சல் மார்சை ஸ்லிப்பில் கில் மூலம் வெளியேற்றினார். இதற்கு அடுத்து வார்னர் தந்த எளிய கேட்சை ஸ்ரேயாஷ் சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் தவறவிட்டார். இதற்கு அடுத்து ஸ்மித் மற்றும் வார்னர் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தார்கள். ரவீந்திர ஜடேஜா வந்து 53 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த வார்னரை வெளியேற்றினார். இதற்கு அடுத்து இரண்டாவது ஸ்பெல்க்கு வந்த முகமது சமி ஸ்மித்தை 60 பந்துகளில் 41 ரன்களில் வெளியேற்றினார்.
இதற்கு அடுத்து மார்னஸ் லபுசேன் 39, கேமரூன் கிரீன் 31, ஜோஸ் இங்கிலீஷ் 45, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 29, மேத்யூ ஷார்ட் 2, சீன் அப்பாட் 2, ஆடம் ஜாம்பா 2, பாட் கம்மின்ஸ் 21* என ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 276 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்ற முகமது சமி மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.