
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சில சாதனைகள் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளார். இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான 15 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.