
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 34-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது அற்புதமான பந்துவீச்சால் வரலாறு படைத்தார். இதில் முகமது ஷமி 2.3 ஓவர்களில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 450 விக்கெட்டுகளை எட்டினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகாஇ கைப்பற்றிய எட்டிய எட்டாவது இந்திய வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மூன்று வடிவங்களிலும் சேர்த்து இதுவரை 190 போட்டிகளில் 247 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள முகமது ஷமி 451 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இந்த அணி தரப்பில் அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங், கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.