அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருதுக்கு இந்திய வீரர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 13 ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்று 10 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியா 7 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது.
இதில் இந்தியா 240 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்படவே, சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார்.
Trending
அந்தப் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். மேலும் இந்த தொடரில் 7 இன்னிங்ஸில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்து வீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமியின் பெயரை இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் முகமது ஷமியின் பெயர் இல்லாத நிலையில், விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ ஒரு சிறப்பு கோரிக்கையாக ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2ஆவது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now