இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
Trending
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார்.
Great News For Indian Fans Ahead Of The BGT! #India #Cricket #TeamIndia #MohammedShami pic.twitter.com/4BOdkJl0Pb
— CRICKETNMORE (@cricketnmore) June 22, 2024
அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now