
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இலங்கை அணியிடம் இழந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகின. ஏனெனில், கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார்.
அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்ற தகவல் வெளியாகினது.