
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெற்றிருந்தாலும் முதல் 4 போட்டிகளில் பிளேயிங் 11ல் அவர் இடம் பெறவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் மூலமாக பிளேயிங் 11இல் இடம் பெற்று விளையாடினார்.
இந்தப் போட்டியில், அவர் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மேலும், இந்தப் போட்டியில் அவர் 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். அதன் பிறகு இந்த தொடர் முழுவதும் 7 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.