முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது - ஹாசின் ஜஹான்!
இந்திய அணி வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் முகமது ஷமிக்கு வாழ்த்து கூற முடியாது என ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கூறியுள்ளார்.
நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகளில் முதல் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் அசைக்க முடியாத நிலையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இதனைதொடர்ந்து இந்திய அணி தங்களது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வரும் நவம்பர் 12ஆம் தேதி மோத உள்ளது. அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி என்பது பேச்சுக்கு இடமில்லாத வேளையில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நான்காம் இடம் பிடிக்கும் அணியுடன் மோதயிருக்கிறது.
அந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இப்படி இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் அரையறுதிக்கு முன்னேறியுள்ளதை அடுத்து பலரது மத்தியிலும் இந்திய வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
Trending
ஏனெனில் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இடம்பெறாத முகமது ஷமி கடைசியாக நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் விளையாடி இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு சேர்த்து 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான பந்து வீச்சுக்கு பலரது மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் முகமது ஷமியின் முன்னாள் மனைவியான ஹாசின் ஜஹான், “இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் முகமது ஷமிக்கு வாழ்த்து கூற முடியாது. ஏனெனில் ஷமி நன்றாக விளையாடினால் அணியில் தொடர்ந்து நீடிப்பார். அதே போன்று நன்றாக சம்பாதிப்பார் அவரால் எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முடியும். அதனால் அவருக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது. நான் பொதுவாக இந்திய அணிக்கு மட்டுமே வாழ்த்து கூறுவேன்” என்று பேசியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை சந்தித்து வந்த முகமது ஷமி அவரது மனைவியுடன் விவாகரத்து பெற்று தற்போது தனியாக இருந்து வரும் வேளையில் மீண்டும் வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது மனைவி இவ்வாறு சில தேவையில்லாத கருத்துக்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now